கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன கேர் எடுக்க வேண்டும்? டிப்ஸ்
தருகிறார் அழகுக்கலை நிபுணர் மோனிஷா பிரசாந்த்.
- கால்களில் இருக்கும் முடிகளை, உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ரீமைப் பயன்படுத்தி ரிமூவ் செய்யலாம்.
- ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கறுப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.
- சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள்
ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்’ என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள்
விமன் ரேசர்’ பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும். - நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
- மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிரபை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.
- ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.
- கால்கள் பொலிவிழந்து இருந்தால், கோகோ பட்டர் மசாஜ் செய்தாலும் பொலிவு கிடைத்து விடும்.
- கால்கள் அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால்தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.
கால்களுக்கும் கேர் எடுக்க மறக்காதீங்க லேடீஸ்!