Sunday, September 15, 2024
Google search engine
HomeBeautyமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..!

முகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..!

இன்று பலருக்கு இருக்க கூடிய அழகு சார்ந்த பிரச்சினைகளில் முதன்மையானவை முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினை தான். இதனை சரி செய்ய வழியே இல்லையா என நினைப்போர்க்கு, பலவித வழிகள் உள்ளது என்பதே பதில்.

அதுவும் நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் இந்த பிரச்சினைகளுக்கான முடிவை தர இயலும். உங்கள் அனைத்து வித பிரச்சினைக்கும் முடிவை தருகிறது பேரிக்காய். எப்படி என்பதை வாங்க தெரிஞ்சிக்கலாம்.

பேரிக்காய்
பலருக்கு இந்த பழம் விழாக்காலங்களில் பயன்படுத்த கூடிய ஒரு பழமாகவே தெரியும். ஆனால், உண்மையில் இந்த பழத்தின் மகிமைகள் பல. இதில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களே இந்த பழத்தின் மகிமைக்கு முக்கிய காரணமாகும். இந்த பழம் தான் உங்களின் முடி பிரச்சினை முதல் பருக்கள் பிரச்சினை வரை அனைத்தையும் சரி செய்ய வல்லது.
அழுக்குகளை போக்க
முகத்தின் அழகை கெடுப்பதில் இதன் அழுக்குகள் தான் முக்கிய இடத்தில் உள்ளன. இதனை போக்க இந்த டிப்ஸ் ஒன்றே போதும்.
தேவையானவை :-
பேரிக்காய் 1
ஓட்ஸ் 2 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் பேரிக்காயின் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொண்டு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் ஓட்ஸ் கலந்து நன்கு அரைத்து கொள்ளவும். இறுதியாக இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிட கழித்து கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவு பெறும்.
முடி பொலிவு பெற
உங்களின் முடி பட்டுப்போல மின்ன வேண்டுமென்றால் அதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். அத்துடன் முடியின் ஊட்டத்தையும் இவை அதிகரிக்குமாம். இதற்கு தேவையானவை
பேரிக்காய் 1
ஆப்பிள் சிடர் வினீகர் 2 ஸ்பூன்
செய்முறை :-
பேரிக்காயை தோல் நீக்கி நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து முடியை அலசி விடவும். இதே போன்று தொடர்ந்து செய்து வந்தால் மிக விரைவில் உங்களின் முடி பட்டு போல மின்ன தொடங்கும்.
பருக்களை ஒழிக்க
முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக அழிக்கவும், அவை வராமல் தடுக்கவும் பேரிக்காய் நன்கு உதவும். இதற்கு காரணம் இவ்வாற்றில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும் தான். இவை எதிர்ப்பு சக்தியை அதிகரித்து முகத்தில் எந்த வித கிருமிகளும் அண்டவிடாத படி பார்த்து கொள்ளும்.
இளமையான முகத்திற்கு
உங்களை அதிக காலம் இளமையாக வைத்து கொள்ள பேரிக்காய் அருமையான தீர்வு. இதில் உள்ள வைட்டமின் சி வயதாவதை தள்ளி போடும் ஆற்றல் கொண்டது. மேலும், இதில் உள்ள வைட்டமின் கே முகம் சுருக்கம் முடியாமல் பார்த்து கொள்ளும்.
முடி உதிர்வை தடுக்க
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வை தடுக்கவும், மண்டையில் ஏற்பட்ட வறட்சியை முழுவதுமாக போக்குவதற்கு பேரிக்காயே போதும். முடியின் முழு போஷாக்கிற்கும் இந்த பேரிக்காய் நன்றாக பயன்படும். இதில் உள்ள வைட்டமின் இ முடியை மிருதுவாக வைத்து கொள்ள உதவுமாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments