Monday, September 16, 2024
Google search engine
HomeBeautyஆப்பிள் கன்னங்களுக்கு..!

ஆப்பிள் கன்னங்களுக்கு..!

‘‘பளபள, தளதள கன்னங்கள் முகத்தின் அழகை கூட்டிக்காட்டும். அதற்கான பிரத்யேக அழகுப் பராமரிப்புகளுக்கு கொஞ்சம் மெனக்கெட்டால் போதும்..!’’

பரம்பரை, முக அமைப்பு மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகிய காரணங்களால் சிலருக்கு கன்னங்கள் ஓட்டிப்போயிருக்கும். அவர்கள் தினமும் மூன்று முறை தலா 30 நிமிடங்களுக்கு பலூனை ஊதி ஊதிப் பயிற்சி செய்வது, கன்னங்களுக்கான சிறந்த பயிற்சி. அலுவலகத்தில் வேலை செய்யும்போது பலூன் இல்லாமலும் பலூன் ஊதுவது போல கன்னங்களை உப்ப வைத்துப் பயிற்சி செய்யலாம்.
கன்னங்கள் புஷ்டியாக வெந்தயம் சிறந்த வழி. தேவையான அளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக் கன்னங்களில் தடவி, 30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் படுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது முகத்துக்கு சிறந்த மாய்ஸ்ச்சரைஸரும்கூட.
சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை வாங்கிக்கொள்ளவும். தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன், தேவையான ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்கு மேல்நோக்கி மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கன்னங்கள் புஷ்டியாவதுடன், தொய்வான சருமமும் இறுக்கமாகும்.
இதேபோல ஷியா பட்டர் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) அல்லது உப்பில்லாத வெண்ணெயைக் குளிக்கும் முன் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிக்கலாம். இது கன்னங்களில் உள்ள சதைப்பகுதியைத் திடமாக்குவது மட்டுமில்லாமல், நல்ல ஷைனிங் கொடுக்கும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை, 8 – 10 பாதாம், 10 கிராம் கசகசா இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் தளதள கன்னங்கள் மற்றும் பளபள சருமம் நிச்சயம்.
கிளிசரின் (மெடிக்கல் கடைகளில் கிடைக்கும்) மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சமமாக எடுத்துக் கலந்து, பஞ்சில் தொட்டு கழுத்து மற்றும் முகத்தில் தடவி, தலையணை இல்லாமல் 15 நிமிடங்கள் கண்கள் மூடிப் படுத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் சருமத்தின் அடிப்பகுதியில் கொலாஜினும், மேற்பகுதியில் ஷைனிங்கும் அதிகரிக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments