Monday, September 16, 2024
Google search engine
HomeBeautyகருவளையமா…கவலை வேண்டாம் !

கருவளையமா…கவலை வேண்டாம் !

இரவில் அதிக நேரம் கண் விழிக்கும் பழக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம், ஒவ்வாமை, தூக்கமின்மை, சீரற்ற மாதவிலக்கு, ரத்தசோகை, உடலில் நீர்ச்சத்துக் குறைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. இவற்றைப் போக்க சில எளிய முறைகளைப் பின்பற்றினால் போதும்
ஸ்ட்ராபெர்ரியில் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடிய ஆல்ஃபா ஹைட்ராக்ஸி, நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விழுதை, கண், முகம், கழுத்துப் பகுதியில் பரவலாகத் தடவிவர, கருவளையம் மறையும்.
வெள்ளரிச் சாறும் பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களை சுற்றிலும் தடவி, மென்மையாக மசாஜ் செய்யலாம்.
தினமும் இரவில் ஆலிவ் எண்ணெயை கண்ணின் கீழ்ப் பகுதிகளில் தடவிவரலாம்.

வெண்ணெயுடன் கொத்தமல்லிச் சாறு கலந்து, கண்களுக்கு பேக் போட கருவளையம் நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
உருளைக் கிழங்கு சாறில் பஞ்சைத் தோய்த்து, கண்களின் மேல் வைத்து, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். உருளைக் கிழங்கு விழுதுடன், சிறிது தயிர் சேர்த்து, கண்ணின் கருவளையம் மீது போட்டு, மென்மையாக மசாஜ் செய்துவர, கறுப்பு நிறம் மாறும்.
பப்பாளியின் சதைப்பகுதியைப் பாலாடையுடன் சேர்த்து மசித்து, முகம், கழுத்துப் பகுதியில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
ஊறவைத்த பாதாமை பாலுடன் சேர்த்து, மை போல அரைத்து, கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்.
சந்தனம் மற்றும் சாதிக்காயை இழைத்து, கண்களை சுற்றிலும் பூசலாம்.
தேனில் திருநீற்றைக் குழைத்து, கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
தோல் நீக்கிய தக்காளி விழுது, கொட்டை நீக்கிய கறுப்புத் திராட்சை விழுது, இவற்றை கருவளையத்தின் மீது பூசலாம்.
பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவம் என அனைத்து உணவையும் தேவையான அளவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதுடன், ஆழ்ந்த நிம்மதியான தூக்கமும், கண்களுக்கு ஓய்வும் இருந்தால், கருவளையம் பற்றிய கவலை இருக்காது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments