Monday, September 16, 2024
Google search engine
HomeBeautyவெயிலும் சருமமும்!

வெயிலும் சருமமும்!

வெயில், சருமத்துக்கு அதிக பாதிப்புகளைத் தரக்கூடியது. அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள் இங்கே

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். பொதுவாக, ஒருவரது உயரத்தைவிட அவரது நிழலின் உயரம் அதிகமாக இருந்தால், அது ஆபத்தில்லாத சூரியஒளி.
சூரியஒளி நேரடியாக தோலில் படுவதைக் காட்டிலும் ஆபத்தானது தண்ணீர், மண், சிமென்ட் தரை போன்றவற்றின் மீது பட்டு எதிரொளித்துப்படுவது.
வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போது விட்டுவிட்டுப் படக்கூடிய சூரியஒளி சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
வெயிலின் தகிப்பில் இருந்து காக்க பருத்தி உடைகளே சருமத்துக்கு நண்பன். பெரியவர்கள் தளர்வான ஆடைகளும், குழந்தைகள் உடம்பு முழுக்க மறைக்கும் ஆடையாக இல்லாதவற்றையும் உடுத்தவும்.
ஒரு நிமிடம் உடல் மீது கதிர்வீச்சு பட்டிருந்தாலும், அதன் தாக்கம் 14 நாட்கள் வரை இருக்கும்.
மின்விளக்கு, தொலைக்காட்சி, கணினி, அலைபேசி என்று சூரியஒளி தவிரவும் ஏதாவது ஒரு கதிர்வீச்சு நம்மீது பட்டுக்கொண்டுதான் இருக்கும். அத்தகைய கதிர்வீச்சுக்கு மிகவும் அதிகமாக உட்படும் சமயங்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது பாதிப்பை குறைக்க உதவும்.
வெயிலில் செல்லும்போது சூரியஒளியை ஈர்க்கவல்ல அடர் நிறங்கள் தவிர்த்து வெளிர் நிறங்களில் ஆடைகள் அணியவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments